திண்டுக்கல்,:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள அ.தி.மு.க., வினர் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நவ.,15, 16ல் விண்ணப்பிக்கலாம்.மாநகராட்சி மேயர், உறுப்பினர், நகர்மன்றத் தலைவர், உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், உறுப்பினர், பேரூராட்சி தலைவர், உறுப்பினர், ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ள அ.தி.முக.,வினர், காலை 10:00 மணி முதல் மாலை 5:00மணி வரை மாவட்டக் கழக அலுவலகத்தில், நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை செலுத்தி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். இத்தகவலை மாவட்டச் செயலாளர் மருதராஜ் தெரிவித்துள்ளார்.