ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி பகுதியில் தென்னை மரங்களுக்கு இடையே விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
செங்குடியில் அதிகளவு விவசாயிகள் நெல் சாகுபடி செய்து உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை ஏமாற்றியதால் ஏற்பட்ட கடும் வறட்சியால் செங்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ஆவரேந்தல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் தென்னை மரங்கள் பெரும்பாலும் கருகி விட்டன.
இந்நிலையில், தோப்புகளில் ஒரு சில தென்னை மரங்கள் மட்டுமே வறட்சிக்கு தப்பியுள்ளன. தோப்பாக இருந்த வயல்களில் ஒரு சில தென்னை மரங்கள் மட்டுமே உள்ளதால், அந்த வயல்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.