ஒட்டன்சத்திரம், :ஒட்டன்சத்திரம் அருகே காவேரியம்மாபட்டி குளத்துக்கரை அருகில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய இரண்டு டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.காவேரியம்மாபட்டி குளக்கரை அருகில் கிராவல் மண் அள்ளப்படுவதாக வந்த தகவலின் பேரில், அரசப்பிள்ளைபட்டி வி.ஏ.ஓ., வினோத்குமார் சோதனை செய்தார். அங்கு பெரியகுளம் வடபுதுப்பட்டி பாண்டி 55, மதுரை முத்துப்பட்டி கண்ணன் 45, ஆகியோர் டிப்பர் லாரிகளில் மண் அள்ளி தப்ப முயன்றனர். சோதனையில் அரசு அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். மண் திருடிய இருவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.