வடமதுரை:அய்யலூர் - பாச்சாநாயக்கனூர் பகுதி ரயில் பாதையில் நேற்று மதியம் வாலிபர் ஒருவர் அடிபட்டு இறந்து கிடந்தார். திருச்சி ரயில்வே போலீசார் விசாரணையில், திருச்சியில் இருந்து மதுரை சென்ற ரயிலில் பயணித்த மூன்று வடமாநில தொழிலாளர்களுள் ஒருவர் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இறந்தவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த போலோநாத் 39, சென்னையில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கன்னியாகுமரியில் மீன்பிடிக்கும் தொழிலுக்காக சென்றது தெரியவந்தது.