திண்டுக்கல், :ஆத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நாளை (நவ.15) நடக்க உள்ளது.வேலை வாய்ப்பு அலுவலம் சார்பில் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கும் முகாமில் 18 வயது நிறைவு பெற்ற இருபாலரும் பங்கேற்கலாம். பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. பங்கேற்க விரும்புவோர் கல்விச் சான்று, ரேசன் கார்டு நகல் மற்றும் அசல், சுயவிவரம், புகைப்படத்துடன் வர வேண்டும் என, கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.