நவ.16 பா.ஜ.,விண்ணப்பம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
நவ.16 பா.ஜ.,விண்ணப்பம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
00:40

திண்டுக்கல், திண்டுக்கல்லில் பா.ஜ., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் நாளை மறுநாள் (நவ.16) முதல் விருப்ப மனு பெறப்பட உள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பா.ஜ., சார்பில் நவ.16 முதல் விருப்ப மனு பெறப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.bjptn.in ல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.10 ஆயிரம், வார்டு உறுப்பினர் ரூ.2,500, நகராட்சி தலைவர் ரூ.5 ஆயிரம், வார்டு உறுப்பினர் ரூ.1000, பேரூராட்சி தலைவர் ரூ.2,500, வார்டு உறுப்பினர் ரூ.500, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரூ.2,500, ஒன்றிய குழு உறுப்பினருக்கு ரூ.500. விருப்ப மனுவுடன் கட்டணமாக செலுத்த வேண்டும். மனுவை மாவட்ட குழுவிடம் கொடுக்கலாம். மேல் முறையீடு செய்ய கோட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என, மாநில பொது செயலாளர் கேசவவிநாயகன் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X