செஸ் போட்டி: டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்லுாரி மாணவி முதலிடம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
செஸ் போட்டி: டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்லுாரி மாணவி முதலிடம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
00:43

ராமநாதபுரம்:அழகப்பா பல்கலை உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே நடந்த செஸ் போட்டியில் ராமநாதபுரம் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் கலை அறிவியல் கல்லூரி மாணவி முதலிடம் வென்றார்.



அழகப்பா பல்கலை உறுப்பு கல்லுாரிகள் பங்கேற்ற செஸ் போட்டி காரைக்குடி அழகப்பா பல்கலையில் நடந்தது. பல்வேறு கலை அறிவியல் கல்லுாரி மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., கலை அறிவியல் பெண்கள் கல்லுாரி இரண்டாமாண்டு வணிகவியல் மாணவி ஏஞ்சலின் பிரசிட்டா முதலிடத்தையும், காரைக்குடி அழகப்பா கலை அறிவியல் கல்லுாரி மாணவி ஜெனிபர் இரண்டாமிடம், காரைக்குடி உமையாள் ராமநாதன் கலை அறிவியல் பெண்கள் கல்லுாரி மாணவி லெட்சுமி மூன்றாமிடம் பெற்றனர்.



முதலிடம் பெற்ற மாணவிக்கு கல்லுாரி தாளாளர் நாசர் அலி, முதல்வர் நிர்மலா குமாரி பரிசுகள் வழங்கி பாராட்டினர். கல்வியியல் கல்லுாரி முதல்வர் முத்து, நிர்வாகிகள் நாகராஜன், ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்கள் மாணவியை பாராட்டினர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X