உத்தரகோசமங்கை கோயிலில் பிளாஸ்டிக் இலையில் அன்னதானம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2019
00:45

உத்தரகோசமங்கை:உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் திருக்கோயில் அன்னதான திட்டத்தில் வாழை இலைக்கு பதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இலை பயன்படுத்தப்படுகிறது.


பழமையும், பெருமையும் வாய்ந்த உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், யாத்திரீகர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தமிழக அரசின் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.



இதையடுத்து, தினமும் பகல் 12:30 மணிக்கு உத்தரகோசமங்கை வரும் பக்தர்கள் 50 பேரை மட்டும் தேர்வு செய்து அன்னதானம் வழங்குகின்றனர். வாழை இலையில் உணவு பரிமாறுவதற்கு பதிலாக பிளாஸ்டிக் இலையில் பக்தர்களுக்க அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைகின்றனர்.



தமிழக அரசு பிளாஸ்டிக் இலைகளுக்கு தடை விதித்துள்ள நிலையில் அரசு நிர்வாகத்தில் உள்ள கோயிலில் பிளாஸ்டிக் இலை பயன்படுத்துவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.எனவே, வாழை இலையில் 50 பேருக்கு தினமும் அன்னதானம் வழங்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X