ராமநாதபுரம்,:மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாளை (நவ.,15) தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியானவர்களை கல்வித் தகுதிக்கு ஏற்ப தேர்வு செய்கின்றனர்.
இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலை தேடுபவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம்.இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்வி சான்றுகள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் புகைப்படத்துடன் நாளை காலை 10:00 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் கலந்து கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தலாம்.
தனியார் நிறுவனங்களில் வேலை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. அரசுத் துறையில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும், என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுகுமார் தெரிவித்துள்ளார்.