ராமநாதபுரம்:மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் ராமநாதபுரம் பாரதிநகர் டி பிளாக் பகுதியில் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்குதல், அரசுத்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் இலவச பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கிறது. இந்த அலுவலகத்தின் தொலை பேசி எண் 04567-230160 கடந்த 20 நாட்களுக்கு மேலாக வேலை செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவோ, தகவல் அறிந்து கொள்ளவோ முடியவில்லை, என புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுகுமார் கூறுகையில், சமீபத்தில் பெய்த மழையால் தொலை பேசி லைன் பழுதடைந்துள்ளது. இது குறித்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம். ஆனால் நடவடிக்கை இல்லை என்றார். மாவட்டத்தின் முக்கிய அலுவலகங்களின் தொலை பேசி அனைத்தும் அவுட் ஆப் நெட் ஒர்க்கில இருந்தால் நாங்கள் எங்கு சென்று முறையிடுவது, என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.