ராமநாதபுரம்:திருவாடானை அருகே நகரிகாத்தான் பகுதியில் சிறுமிக்குபாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் மகிளா கோர்ட் உத்தரவிட்டது.
திருவாடானை அருகே நகரிகாத்தான் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு அதேபகுதியை சேர்ந்த சலவைத் தொழிலாளி தர்மலிங்கம் 49, என்பவர் 2016 செப்., 26 ல் வீடுபுகுந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து திருவாடானை அனைத்து மகளிர் போலீசில் சிறுமி புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தர்மலிங்கத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு ராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், தர்மலிங்கத்திற்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 2000 ரூபாய் அபராதம், கட்டத்தவறினால் 3 மாதம் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார்.