ஆற்றாங்கரையில் இருளில் தவிக்கும் மீனவர்கள்  | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
ஆற்றாங்கரையில் இருளில் தவிக்கும் மீனவர்கள் 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
00:52

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே ஆற்றாங்கரை கடற்கரைப்பகுதியில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்துள்ளதால், இருளில் மீனவர்கள் தவிக்கின்றனர்.



ஆற்றாங்கரை முகத்துவாரம் பகுதியில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் வழக்கமாக இரவு 12:00 முதல் காலை 4:00 மணி வரை கடலுக்குள் புறப்பட்டு செல்வார்கள். இதனால் மீனவர்களுக்காக கடற்கரை பகுதியில் மின் விளக்குள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இன்று வரை மின் வாரிய அதிகாரிகள் அதனை சரி செய்யவில்லை.



இதனால் இப்பகுதிகளில் மின் விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது. அதிகாலையில் மீன் பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் இருளில் தவிக்கின்றனர். மின் வாரிய அதிகாரிகள் அலட்சியப் போக்கை கைவிட்டு உடனடியாக அறுந்து விழுந்த மின் கம்பிகளை சரி செய்து விளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X