ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே ஆற்றாங்கரை கடல் முகத்துவாரத்தில் கடல் புறாக்கள் குவிந்துள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயில், தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிகளில் அதிகளவில் கடல் புறாக்கள் காணப்படும். இப்பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கடல் புறாக்கள் உள்ளன. இவைகள் கடலில்உள்ள சிறு மீன்களை உண்டு வாழும். தற்போது பறவைகள் இனப்பெருக்க காலம்அக்., முதல் பிப்., வரை உள்ளதால் கடல் புறாக்கள் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன.
குறிப்பாக கடலுக்குள் உள்ள தீவுகளுக்குள் அதிகளவில் காணப்படும். தற்போது ராமநாதபுரம் அருகே ஆற்றாங்கரை முகத்துவாரத்தில் கடலுக்கும், ஆற்றுக்கும் இணைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் கடல்புறாக்கள் அதிகளவில் வந்து குவிந்துள்ளன. ரம்மியமான சூழலால் கடல் பறவைகள் வருகை அதிகரித்துள்ளது.