| அ.தி.மு.க., நிர்வாகி கொலையில் இருவர் கைது: 8 பேர் மீது வழக்குப்பதிவு Dinamalar
அ.தி.மு.க., நிர்வாகி கொலையில் இருவர் கைது: 8 பேர் மீது வழக்குப்பதிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
01:12

விருதுநகர்:விருதுநகரில் அ.தி.மு.க., நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



விருதுநகர் அல்லம்பட்டி மாத்திநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சண்முகவேல் ராஜா 44. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அ.தி.மு.க.,வில் ஒன்றிய மாணவரணி அவைத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே வந்த சண்முவேல் ராஜாவை மர்ம நபர்கள் வீட்டு வாசலில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.



இக்கொலை சம்பவத்திற்கான சி.சி.டி.வி., ஆதாரங்கள் கிடைத்தன. அதில் பதிவான காட்சிகளின் கொலையாளிகளை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இதன்படி விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ், சேர்மராஜ், பாலமுருகன், கீர்த்தீஸ்வரன், கிரி, சதீஷ்குமார் என்ற வெள்ளையன், சதிஷ்குமார் என்ற பெயருடைய இருவர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சேர்மராஜ், சதீஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். விசாரணையில், கடந்த 2018ல் சுகன்ராஜ் தனது உறவு பெண்ணுடன் முத்துக்காமாட்சி தகாத உறவு வைத்ததை கண்டித்துள்ளார். முத்துக்காமாட்சி சுகன்ராஜ்ஜை வெட்டிவிட்டார். இதில் ஆத்திரமடைந்த சுகன்ராஜ் தரப்பு முத்துக்காமாட்சியை கல்லுாரி ரோட்டில் வைத்து வெட்டி கொன்றனர். அதை தொடர்நது பழிக்கு பழியாக கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. தற்போது கொலை செய்யப்பட்ட சண்முகவேல் ராஜா, முத்துக்காமாட்சி கொலை வழக்கில் முதல் குற்றவாளி ஆவார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X