| அண்ணாமலை பல்கலை கழகத்தில் இலவச தொழிற் பயிற்சி வகுப்புகள் Dinamalar
அண்ணாமலை பல்கலை கழகத்தில் இலவச தொழிற் பயிற்சி வகுப்புகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
01:14

சிதம்பரம் : அண்ணாமலைப் பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு மையத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய இலவச தொழிற் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.



சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு மையம் மற்றும் மத்திய அரசின் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மேம்பாட்டு நிறுவனம் இணைந்து இந்திய அரசின் சான்றிதழுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி வகுப்பை நடக்கிறது. பயிற்சி வகுப்புகள் திறன் மேம்பாட்டு மையத்தில் இரண்டு முதல் மூன்று மாதம் இலவசமாக நடத்தப்படுகிறது. வகுப்பில் எக்ஸ்-ரே டெக்னீஷியன், மெடிக்கல் டெக்னீஷியன், எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீஷியன், அலுவலக ரிசப்ஷனிஸ்ட், எலக்ட்ரீஷியன், ஏர்லைன் கஸ்டமர் எக்ஸிக்கியூடிவ், ஏர்லைன் பேக்கேஜ் உள்ளிட்ட பல தொழிற் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.



18 வயது முதல் 32 வயது வரை உள்ள 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள். ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.ஏ., பி.எஸ்.சி., பி,காம்., போன்ற இளநிலை பட்டம் படித்தவர்கள் இலவச தொழிற் பயிற்சி வகுப்பில் சேர அனுமதிக்கப்படுவர்.பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் பள்ளி சான்று, முகவரி சான்று, சாதி சான்று, வருமான சான்று, ஆதார் அட்டை ஆகிய நகல்கள் மற்றும் போட்டோவுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் தங்கள் பெயரை வரும் 24ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.இத்தகவலை இயக்குனர் மாலதி தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X