'லேப்டாப்' வழங்க மறுப்பு; மாணவிகள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2019
01:15

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் அரசு வழங்கும் இலவச லேப்டாப் வழங்குவதை, நிறுத்த அரசு உத்தரவிட்டதால் மாணவிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


க்ஷ

அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச 'லேப்டாப்'' வழங்கி வருகின்றது. கடந்த 2018-19 ல் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு அரசு லேப்டாப் அந்தந்த பள்ளிகளில் வழங்கி வருகிறது. அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த 149 மாணவிகளுக்கு லேப்டாப் நேற்று முன்தினம் முதல், அரசு அறிவித்துள்ள விதிகளின்படி வழங்கப்பட்டு வருகின்றனர்.



நேற்றும் லேப்டாப் பெற மாணவிகள் வந்திருந்தனர். திடீரென்று, காலை 10:00 மணிக்கு லேப்டாப் வழங்க வேண்டாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வந்த உத்தரவையடுத்து, லேப்டாப் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால், லேப்டாப் வாங்காத மாணவிகள் பள்ளிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர்.



இதுகுறித்து, மாணவிகள், '' நாங்கள் இங்கு பிளஸ் 2 முடித்து விட்டு வெளியூரில் மேற்படிப்பு படித்து வருகின்றோம். எங்களை லேப்டாப் வாங்க வரச் சொல்லியதை அடுத்து நாங்கள், விடுமுறை எடுத்து வந்துள்ளோம். திடீரென்று அரசு லேப்டாப் வழங்க வேண்டாம் என்று உத்தரவு வந்துள்ளதாக பள்ளியில் கூறுகின்றனர். அதற்கு நாங்கள் என்ன செய்வது. மீண்டும் நாங்கள் எப்படி விடுமுறை எடுத்து வருவது.'' என்று புலம்பினர். தகவல் அறிந்து வந்த போலீசார்கள் மாணவிகளை சமாதானம் செய்து அனுப்பினர்.



இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினியிடம் கேட்டபோது, '' அரசிடம் இருந்து, லேப்டாப் வழங்க வேண்டாம் என்ற உத்தரவு வந்ததால், நாங்கள் உடனடியாக நிறுத்தி விட்டோம். மீண்டும் அரசு உத்தரவு வந்த உடன், வந்துள்ள அனைத்து மாணவிகளுக்கும் லேப்டாப் வழங்கப்படும். '' என்றார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X