அசட்டையால் அல்லல் நெடுஞ்சாலைகளில் சேதமடைந்த போக்குவரத்து உபகரணங்கள்:தொடரும் விபத்துக்களால் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2019
01:21

விருதுநகர்:மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து உபகரணங்கள் சேதமடைந்து கிடக்கின்றன. தொடரும் அதிகாரிகளின் பாராமுகத்தால் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலையில் செல்ல முடியாமல் திணறுகின்றனர்.



நாடு முழுவதும் எளிதாக பயணம் செய்யும் வகையில் நான்கு வழிச்சாலை திட்டத்தை மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்தார். இதற்காக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை உள்ள அனைத்து மாநிலங்களிலும் நான்கு வழிச்சாலை போடப்பட்டது.



தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை நான்குவழிச்சாலை வசதி உள்ளது. விருதுநகர், சாத்துார் வழியாக செல்லும் இந்த நான்குவழிச்சாலையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. ரோடு வசதி நன்றாக இருக்கும் பட்சத்திலும் விபத்துகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக போக்குவரத்து உபகரணங்கள் செயல்பாடற்று வெறும் காட்சி பொருளாக இருப்பதுதான்.



வழிகாட்டும் அறிவிப்பு பலகைகள், இரவில் மின்னும் ரோட்டோர பிரதிபலிப்பான்கள், சோலார் விளக்குகள், சிக்னல்கள் என எதுவும் முறையாக செயல்படுவதில்லை. பிரதிபலிப்பான்கள் இரவு பயணத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. சாத்துார் துவக்கத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் தாண்டி விருதுநகர் வரை பிரதிபலிப்பான்கள் வேலை செய்வதே இல்லை.



இதனால் வளைவுகளில் திரும்பும் போது தடுப்புச்சுவர்களில் மோதுகின்றனர். அதே போன்று தானாக எரியக் கூடிய சோலார் விளக்கு கம்பம், சிக்னல் கம்பம் ஆகியவை சேதமடைந்து டிவைடரிலே விழுந்து கிடக்கின்றன. அதிக காற்று வீசினால் மின்கம்பங்கள் துாக்கி வீசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.



நடவடிக்கை தேவை





தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நிச்சயம் விருதுநகர் வழியாக தான் மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல முடியும். பேரிகார்டுகள் நான்குவழிச்சாலைகளில் ஆங்காங்கே சாய்ந்து கிடக்கின்றன. இதை அறியாமல் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் போக்குவரத்து உபகரணங்களும் சேதமடைந்து கேட்பாரற்று கிடக்கிறது. நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்து உபகரணங்களை சீர்செய்ய நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



-ஈஸ்வரன், முன்னாள் ராணுவ அதிகாரி, விருதுநகர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X