விருதுநகர்:விருதுநகரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளின் நண்பன் எனும் ஒரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக சைல்டு லைன் திட்ட அலுவலர் முருகன் கூறினார்.
அவர் கூறியதாவது: குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு "குழந்தைகளின் நண்பன்" எனும் ஒரு வார விழிப்புணர்வை நிகழ்ச்சி தேசிய அளவில் நடத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் நவ. 13 முதல 20 வரை நடக்கிறது. இதையொட்டி கலை நிகழ்ச்சிகள், மரம் நடுதல், போட்டிகள், மனித சங்கிலி, கலெக்டருக்கு ராக்கி கட்டும் நிகழ்வு உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
2018---19ல் குழந்தை திருமணத்தில் 6 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். மொத்த அழைப்பு 766 அழைப்புகள் வந்துள்ளன, என்றார். ஸ்பீச் அமைப்பின் இயக்குனர் பொன்னமுதன், ஆர்.சி.பி.டி.எஸ்., அமைப்பின் இயக்குனர் அரசன், எம்.எம்.எஸ்., இயக்குனர் லாரன்ஸ், ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி ஆகியோர் பங்கேற் றனர்.