கோவை:கோவை நகர்ப்பகுதியில் உள்ள ரோடுகளை புதுப்பிக்க, ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டு
உள்ளது. பொத்தல் ரோடுகளை விரைந்து சீரமைக்க, மண்டலத்துக்கு ஒரு ஒப்பந்ததாரர்
நியமிக்கப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டதும், புதிய ரோடுகள் போடப்படும் என தெரிவித்த மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார், மேலும் கூறியதாவது:பேட்ச் ஒர்க் செய்யும்போது, வழக்கம்போல் குழியில், தார் கலவை ஊற்றி நிரப்பக்கூடாது. சதுர வடிவில் வெட்டி அளந்து, 'ஸ்மார்ட்' மொபைல் போனில் புகைப்படம் எடுத்து, மாநகராட்சியின் பிரத்யேக செயலியில், பதிவேற்றம் செய்ய வேண்டும். அளவீடு குறிப்பிட வேண்டும்.
மண்டலத்துக்கு ஒரு ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
சமுதாய பொறுப்பு நிதியில்...
பாதாள சாக்கடை அடைப்பு நீக்க, 'ரோபாடிக்' இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அதை கையாள, ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சமுதாய பொறுப்பு நிதியில், 25 இயந்திரம் வாங்கிக் கொடுக்க, ஒரு நிறுவனம் முன்வந்துள்ளது.தமிழக அரசு நிதியையும் சேர்த்து, மாநிலம்
முழுவதும் 'ரோபாடிக்' இயந்திரம் பயன்படுத்த ஆலோசனை நடந்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.