கோவை:கோவையில் நேற்று முன்தினம், டவுன் பஸ் டிஎன் 38 என் 2994, ரூட் எண், 5சி பஸ்சில் காலை, 10:30 மணிக்கு, நாகலாந்தை சேர்ந்த மெர்சி என்பவர் பயணம் செய்தார்.தனது
கைப்பையை ஞாபக மறதியாக, தவற விட்டு இறங்கி சென்று விட்டார்.
அந்த கைப்பை, கண்டக்டர் ரங்கநாதன் கையில் கிடைத்தது.
பையில், 69 ஆயிரம் ரூபாய்
இருந்தது. இவரும், டிரைவர் பழனிசாமியும்
பணத்தை, போக்குவரத்து கழக தலைமை
அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பணத்தை தவற விட்ட பயணி தேடி வந்த போது, அவரிடம் பணப்பை ஒப்படைக்கப்பட்டது.