புத்தகங்கள், மரக்கன்றுகள் வழங்குங்கள்... சபாஷ்! 'பொக்கே' தவிர்க்குமாறு அமைச்சர் அறிவுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2019
02:04

புதுச்சேரி : காரைக்காலில் நடக்கும் அரசு விழாக்களில் மலர்க்கொத்து, சால்வை ஆகியவற்றுக்கு பதிலாக புத்தகங்கள் மற்றும் மரக்கன்றுகளை பரிசாக வழங்க வேண்டும் என, அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தி உள்ளார்.



விழாக்களில் பங்கேற்கும் பிரமுகர்களுக்கு மலர்க்கொத்து தந்து வரவேற்பதும், பொன்னாடை அணிவித்து கவுரவிப்பதும் வழக்கம். இது, வெறும் சம்பிரதாயமாக பின்பற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில், காரைக்காலில் நடக்கும் அரசு விழாக்களில் மலர்க்கொத்து தருவது, பொன்னாடை அணிவிப்பது ஆகியவற்றை தவிர்க்குமாறு, அதிகாரிகளுக்கு அமைச்சர் கமலக்கண்ணன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.



மலர்க்கொத்து, பொன்னாடை ஆகியவற்றுக்கு பதிலாக, வாழ்க்கையில் எப்போதும் பயன்படக் கூடிய புத்தகங்களையும், சுற்றுச்சூழலை காக்கும் வகையில் மரக்கன்றுகளையும் வழங்கலாம் என்றும் கமலக்கண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக, காரைக்காலில் அமைந்துள்ள அரசு துறை அலுவலகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு, கலெக்டரிடம் தெரிவித்துள்ளார்.



அமைச்சரின் அறிவுறுத்தலை தொடர்ந்து, காரைக்கால் கலெக்டர் விக்ராந்த் ராஜா, அலுவலகங்களின் தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, காரைக்கால் மாவட்டத்தில் நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்கும் பிரமுகர்களுக்கு, மலர்க்கொத்து அளிப்பது, சால்வை அணிவிப்பது ஆகியவற்றை தவிர்க்குமாறு, அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தி உள்ளார். இவற்றுக்கு பதிலாக, புத்தகங்கள், மரக்கன்றுகள் ஆகியவற்றை வழங்கலாம் எனவும் ஆலோசனை தெரிவித்துள்ளார்.



வழங்கப்படும் மலர்க்கொத்துக்களின் ஆயுள் காலம் மிக குறைவு; அதாவது, குறுகிய நேரமே அவற்றை வைத்திருக்க முடியும்.அதேசமயம், புத்தகங்கள், மரக்கன்றுகள் ஆகியவற்றை வழங்கும்போது, அவை வீட்டின் ஒரு அங்கமாகவும், குடும்பத்தின் ஒரு அங்கமாகவும் மாறும். மேலும், புத்தகம், மரக்கன்று போன்றவை நல்லமுறையில் பயன்படுத்த முடியும். எனவே, அரசு விழாக்களிலும், தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கின்ற சிறப்பு நிகழ்ச்சிகளிலும் புத்தகங்கள், மரக்கன்றுகள் தருகின்ற நடைமுறையை அதிகாரிகளும், பொதுமக்களும் பின்பற்றலாம்' என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X