சூதாட்ட கிளப் கொண்டுவர முயற்சி பா.ஜ., சாமிநாதன் குற்றச்சாட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2019
02:05

புதுச்சேரி : புதுச்சேரியில் சூதாட்ட கிளப் கொண்டுவர முயற்சி நடப்பதாக, பா.ஜ., தலைவர் சாமிநாதன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.



இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:சிங்கப்பூர் பயணத்தால், ரூ. 3,000 கோடி வெளிநாட்டு முதலீடு வருகிறது என்ற அறிவிப்பை முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ளார். ரூ. 3,000 கோடி முதலீடு பெறுவதற்கான சென்றவர்கள் அரசு செயலர்களை அழைத்துக்கொண்டு அரசு முறை பயணமாக சென்றிருக்க வேண்டும். எனவே, முதல்வரின் தனிப்பட்ட பயணம் உள்நோக்கம் உள்ளதாக தெரிகிறது.முதல்வர் மற்றும் அமைச்சர்கள், புதுச்சேரிக்கு கேசினோ சூதாட்ட கிளப் கொண்டுவர முயற்சி செய்துவரும் நிலையில், அது தொடர்பாக, சிங்கப்பூர் பயணத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கேசினோ போன்ற சூதாட்ட கிளப்பை புதுச்சேரிக்கு கொண்டு வந்தால் புதுச்சேரி மிகப்பெரிய அழிவை எதிர்கொள்ளும். எனவே, பா.ஜ., கட்சி இதை அனுமதிக்காது.



மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.புதுச்சேரிவிமான ஓடுதளத்தை மேம்படுத்த முயுற்சி எடுக்காமல், சர்வதேச விமான நிலையம் கரசூரில் அமைக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். அப்போதைய பிரதமர் வாஜ்பாய், கரசூரில் சிறப்பு பொருளாதார வளாகம் அமைக்க அறிவித்தார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கரசூர் நிலம் உள்ளது. எனவே, மத்திய அரசிடம் அனுமதி கூட பெறாமல், இந்த தகவலை முதல்வர் கூறியுள்ளார்.



புதுச்சேரிக்கு அருகே சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் இயங்கிவரும் ஐ.டி., நிறவனங்களை கொண்டுவர முடியாத முதல்வர், சிங்கப்பூர் சென்று ஐ.டி., பார்க் கொண்டுவர ஆலோசித்ததாக கூறுகிறார். முதல்வர், தொழில் துறை அமைச்சர், பிப்டிக் சேர்மன் ஆகியோர் சிங்கப்பூர் பயணத்தின் உண்மை மறைக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தால், புதுச்சேரிக்கு எந்த பயனும் கிடைக்காது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X