முதியவர்களிடம் நில அபகரிப்பு கவர்னர் கிடுக்கிப்பிடி உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2019
02:05

புதுச்சேரி : முதியவர்களிடம் நில அபகரிப்பை தடுக்க, போலீஸ் அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பேடி கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.



முதியவர்களின் நில அபகரிப்பு புகார் மீதான மறு ஆய்வு கூட்டம் நேற்று, கவர்னர் மாளிகையில் நடந்தது. கவர்னர் கிரண்பேடி தலைமை தாங்கினார். கூட்டத்தில், கவர்னரின் சிறப்பு பணி அதிகாரி தேவநீதிதாஸ், டி.ஜி.பி., பாலாஜி ஸ்ரீவத்சவா, சீனியர் எஸ்.பி.,் ராகுல் அல்வால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கவர்னர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு:முதியவர்களின் நில அபகரிப்பு புகார்களை சீரியஸ் குற்றமாக பார்க்க வேண்டும். நில அபகரிப்பு புகார்கள் வந்தால், பிரச்னைக்குரியஇடத்தை நேரில் ஆய்வு செய்து, உண்மை நிலவரத்தை தெரியப்படுத்த வேண்டும். நில அபகரிப்பு புகார் மீது இதை விசாரிக்கவும் என மேலோட்டமாக குறிப்பு எழுதக்கூடாது. முதியவர்களின் நில அபகரிப்பு புகார்கள் மீதான உண்மை தன்மையை தனிப்பட்ட முறையில் நேரடியாக டி.ஜி.பி.,யும் கவனம் செலுத்த வேண்டும். தங்கள் பகுதியில் உள்ள முதியவர்கள் பட்டியலை போலீசார் தயாரிக்க வேண்டும்.



முதியவர்களின் வயதை கருத்தில் கொண்டு அவர்களை யாரும் துன்புறுத்தாத வகையில் ரோந்து அதிகாரிகளை கொண்டு நேரில் பார்வையிட்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இனி, யாரும் முதியவர்களை பயமுறுத்தி, அவர்களுடைய நிலம், வீடுகளை பறிக்காத வகையில் உறுதுணையாக இருக்க வேண்டும்.யாராவது துன்புறுத்தினால் டி.ஜி.பி.,யை நேரில் குறைகேட்பு நேரத்தில் சந்திக்கலாம் என முதியவர்களிடம் தெரியப்படுத்த வேண்டும்.இல்லையெனில் ராஜ்நிவாஸ் குறை கேட்பு நேரத்தில் வரலாம். அல்லது 1031 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவித்து முதியவர்கள் நில அபகரிப்பு புகார்களை கூறலாம் என நம்பிக்கை ஊட்ட வேண்டும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து புதுச்சேரி நில அபகரிப்பினை தடுத்து நிறுத்துவோம்.இவ்வாறு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X