கமல்ஹாசனை விமர்சிப்பதா? மக்கள் நீதி மையம் கண்டிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2019
02:06

புதுச்சேரி : கமல்ஹாசனை தமிழக முதல்வர் விமர்சனம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என, புதுச்சேரி மக்கள் நீதி மைய தலைவர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் கூறியுள்ளார்.



இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:நாட்டில் மக்களுக்கு சேவை செய்பவர்கள் யாரும் அரசியலுக்கு வரலாம். அந்த வகையில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அரசியல் கட்சியை துவக்கி நல்லாட்சி செய்தார். அவரது மறைவிற்கு பிறகு அக்கட்சியில் சேவை குறைந்து, தவறான நிர்வாகம் தலை தூக்கியது.துாய்மையான அரசியலை கொண்டுவந்து, மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கமல்ஹாசன் மக்கள் நீதி மையத்தை துவக்கி செயல்பட்டு வருகிறார். தனது மக்கள் சேவையின் ஒரு பகுதியாகத்தான் தமிழகத்தில் மக்களுக்கு சிறந்த சேவை செய்யக்கூடிய அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதைசுட்டிக் காட்டினார்.



இதை ஏற்று, தன்னை சீர்படுத்திக் கொண்டு சிறந்த நிர்வாகத்தை தருவதற்கு மாறாக, தமிழக முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.வயதாகி படவாய்ப்பு இல்லாததால் கமல்ஹாசன் அரசியலுக்கு வரவில்லை. பணம் சம்பாதிக்கும் தொழிலாகவும் அவர் அரசியலை பார்க்கவில்லை. தவறான நிர்வாகத்தை தருபவர்களும், அரசியல் செய்பவர்களும் தான் கமல்ஹாசனை கண்டு பயப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X