புதுச்சேரி : புதுச்சேரியில் நான்காம் கட்டமாக, சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று முதல் துவங்குகிறது.
இதுகுறித்து கலெக்டர் அருண் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி பிரதான சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த ஏப். 23ம் தேதி கலெக்டர் தலைமையில் நடந்த மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, நகராட்சி, வருவாய், பொதுப்பணித்துறை, மின்துறை, போலீஸ் சேர்ந்து குழுவாக ஆக்கிரமிப்புகளை கடந்த ஏப். 29 ம் தேதி முதல் மூன்று கட்டமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தற்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில், மீண்டும் புதிதாக ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளதால், மீண்டும் சாலை வாரியாக நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து துறை குழுவானது இன்று 14ம் தேதி முதல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ள உள்ளது.ஆதலால், ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மேலும், அபராதம் மற்றும் நகராட்சி தொழில் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இன்று 14ம் தேதி, கடலுார் சாலையில், வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை முதல் மரப்பாலம் வரையிலும், 15ம் தேதி இந்திரா சிலை முதல் மூலக்குளம் வரை, 18ம் தேதி மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் வரை, 20 ம் தேதி இந்திரா சிலை முதல் ராஜிவ் சிலை வரை, 22ம் தேதி புவன்கரே வீதி, 25ம் தேதி வழுதாவூர் சாலையில் கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரி வரையிலும், 27 ம் தேதி அண்ணா சாலையில் அதிதி ஓட்டல் வரையிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட உள்ளது.
29 ம் தேதி வழுதாவூர் சாலை, அரசு மருத்துவ கல்லுாரி முதல் மேட்டுப்பாளையம் வரை, டிசம்பர் 2ம் தேதி புஸ்சி வீதி, 4ம் தேதி மேட்டுப்பாளையம் முதல் குருமாம்பேட் வரை, 5ம் தேதி லெனின் வீதி, 9 ம் தேதி குண்டுசாலை, 11ம் தேதி திருவள்ளுவர் சாலையில், சுப்பையா சிலையில் இருந்து பெரியார் சிலை வரை, 13ம் தேதி முருகா தியேட்டர் முதல் ஜிப்மர் வரை, 16ம் தேதி லதா ஸ்டீல் ஹவுஸில் இருந்து ஏர்போர்ட் சாலை என்.சி.சி. வளாகம் வரை, 18 ம் தேதி இந்திரா சிக்னல் முதல் சுப்பையா சிலை வரை, 20ம் தேதி, 45 அடி சாலையில் அவ்வை திடல் முதல் வெங்கடேஸ்வரா நகர் வரை, 23ம் தேதி காந்தி வீதி, 27 ம் தேதி காமராஜர் சாலையில் பெரியார் சிலை வரை, 30ம் தேதி அம்பேத்கர் சாலை உப்பளம், ஜனவரி 3ம் தேதி காமராஜர் சாலையில், ராஜா தியேட்டர் சிக்னல் வரை, 6ம் தேதி நுாறடிச்சாலை, 8 ம் தேதி அரியாங்குப்பம் பாலம் முதல் நோணாங்குப்பம் வரை, 8 ம் தேதி மதகடிப்பட்டு, திருக்கனுார், திருவண்டார்கோவில், 10ம் தேதி கடலுார் சாலையில் லெனேவா கம்பெனி முதல் தவளக்குப்பம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது.