மனித நேயமிக்க மாணிக்கம்: எஸ்.எஸ்.ஐ.,க்கு மக்கள் பாராட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2019
02:16

பீர்க்கன்காரணை:வயது முதிர்ந்தவர்கள், இயலாதவர்களுக்கு உதவி வரும், எஸ்.எஸ்.ஐ.,க்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


போலீசார் என்றாலே, லஞ்சம் வாங்குபவர்கள், அதிகாரத்தை இயலாதவர்கள் மீது காட்டுபவர்கள் எனும் எண்ணங்களே, மக்கள் மனதில் மேலோங்கி உள்ளது.ஒரு சிலர் மட்டுமே, நேர்மையானவர்களாகவும், தங்களின் சம்பளத்தில், இயலாதவர்கள், ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்து, அதில், மனநிறைவு அடைபவர்களாகவும் உள்ளனர்.


அவர்களில் ஒருவராக திகழ்கிறார், பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் பணிபுரியும், எஸ்.எஸ்.ஐ., சண்முகசுந்தரம், 55.பீர்க்கன்காரணை, ஏரிக்கரை பேருந்து நிலையம் அருகே, மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு, உடை, உணவு வாங்கி கொடுத்தபடி, பணியில் ஈடுபட்டிருந்த அவர், நம்மிடம் பேசியதாவது:என் சொந்த ஊர், நாகர்கோவில் அடுத்த நாஞ்சில். தற்போது குடும்பத்துடன், செய்யாறில் வசிக்கிறேன். 1988ல், வேலுாரில் பயிற்சி பெற்று, போலீஸ் பணிக்கு தேர்வானேன். சிறுவயது முதல், ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்ததால், வறுமையின் வலி எனக்கு தெரியும்.போலீஸ் பணியில் சேர்ந்து, 31 ஆண்டுகளில், சாலையோரம் வசிக்கும் முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஊனமுற்றவர்கள் என, யாராவது ஒருவருக்கு, தினமும் என்னால் முடிந்த உதவியை செய்து வருகிறேன்.தீபாவளி, பொங்கல் வந்தால், புது ஆடைகள், உணவு என, அவர்களுக்கு கொடுத்து வருகிறேன். இவை அனைத்தையும், என் சம்பளத்தில் செய்து வருகிறேன்.மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பது, எனக்கு முக்கியமல்ல; நான் வாழும் வரை, என்னால் முடிந்த உதவிகளை, இயலாதவர்களுக்கு செய்ய வேண்டும் எனக் கூறிய அவர், தொடர்ந்து பணியை கவனிக்க சென்றார்.இன்றைய சமூகத்தில், காவல் நிலையங்களில் எழுதப்பட்டுள்ள, 'காவலர் உங்கள் நண்பன்' எனும் வாசகம், பெயரளவில் மட்டுமே உள்ளது. சண்முகசுந்தரம் போன்ற ஒரு சிலர் மட்டுமே, இச்சொற்களை நிஜமாக்கி வருகின்றனர்.


இவரை பாராட்ட விரும்புவோர், 94981- 30099 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X