உள்ளங்கையில் உலகம்! சர்வதேச தரச்சான்றிதழ்கள் பெற, இனி மானியம்; ஏற்றுமதியில் குறு, சிறு நிறுவனங்கள் ஜொலிக்கலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2019
02:16

திருப்பூர்:சர்வதேச தரச்சான்றிதழ்களைப் பெறுவதற்கு, மானியம் பெற முடியும் என்பதால், சிறு, குறு நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன. இதன்மூலம், சர்வதேச அளவில், ஏற்றுமதி வணிகத்தில் இந்நிறுவனங்கள் ஜொலிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.



அதேசமயம், மானிய உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று விரும்புகின்றன.சிறு, குறு நிறுவனங்கள், தரச்சான்று பெறுவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு அரங்கில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணாதுரை, மோகனசுந்தரம் முன்னிலைவகித்தனர்.




மாவட்ட தொழில்மைய மேலாளர் கண்ணன் பேசியதாவது:தொழில்முனைவோர், பொருட்களை தரமானவகையில் தயாரிக்கவேண்டும். அப்போதுதான், நிறுவனத்தை, நீண்டகாலம் வெற்றிகரமாக நிலைநிறுத்த முடியும். தரச்சான்றுகள் பெறுவதற்கு, நுாறு சதவீதம் மானியம் வழங்கும், மாநில அரசு திட்டங்கள் உள்ளன.ஆயத்த ஆடை உற்பத்தி துறையினர் உள்நாட்டு தரச்சான்றுகள் மட்டுமின்றி, சர்வதேச தரச்சான்றுகளையும் பெறவேண்டியுள்ளது.



தமிழக அரசு, உள்நாட்டு தரச்சான்றுகளுக்கு மட்டுமே, மானியம் வழங்குகிறது.சர்வதேச தரச்சான்றுக்கான தணிக்கை, சான்று பெறுவதற்கும் மானியம் வழங்கவேண்டும் என, தொழில்பாதுகாப்புக்குழு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது; தொழில்துறையினரின் இந்த கோரிக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஆயத்த ஆடை உற்பத்தி துறையினர், ராப், ஜி.எம்.பி.,--பி.எஸ்.சி.ஐ., போன்ற பல்வேறுவகையான சர்வதேச தரச்சான்றுகள் பெறுவதற்கும் இனி மானியம் பெறமுடியும்.அதிகபட்ச மானிய உச்ச வரம்பு, 1 லட்சம் ரூபாயாக உள்ளது;



பெரும்பாலான தரச்சான்றுகள் பெற, 1.8 லட்சம் வரை செலவிட வேண்டியுள்ளதாகவும், உச்சவரம்பை உயர்த்த வேண்டும் எனவும், தொழில்முனைவோர் பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்த கோரிக்கையையும் அரசுக்கு கொண்டுசென்றால், நிறைவேற்றித்தர வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.சிறு, குறு நிறுவனத்துறை உதவி இயக்குனர் விஜயகுமார், மத்திய அரசு திட்டங்கள் குறித்து பேசினார்.



சர்வதேச தரச்சான்று பெறுவதன் மூலம், உள்ளங்கையில் உலகம் என்ற உன்னதத்தை, ஏற்றுமதியில் ஜொலிப்பதன் மூலம், குறு, சிறு நிறுவனங்கள் அடைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X