| தபால் நிலையத்தில் சுருட்டல்? வாடிக்கையாளர்கள் முற்றுகை Dinamalar
தபால் நிலையத்தில் சுருட்டல்? வாடிக்கையாளர்கள் முற்றுகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
02:46

வெள்ளகோவில்:வெள்ளகோவில் தலைமை தபால் நிலையத்துக்குட்பட்ட வேலப்பநாய்க்கன் வலசில், கிளை தபால் நிலையம் உள்ளது.



கடந்த ஒரு ஆண்டாக சொரியங்கிணற்றுப் பாளையத்தை சேர்ந்த கண்ணன், 28, என்பவர், ஆக்டிங் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். பல்வேறு கிராம மக்கள், மாதாந்திர தொடர் வைப்பு நிதி, சேமிப்பு புத்தகம்,நிரந்தர வைப்பு நிதி என 500க்கும் மேற்பட்ட கணக்குகளில் லட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்துள்ளனர்.வாடிக்கையாளர் ஒருவர், தனது கணக்கில் உள்ள பணத்தை தேவைக்காக எடுக்க கேட்ட போது, பணம் வரவில்லை என ஏழு நாட்களாக, கண்ணன் கூறியுள்ளார்.



சேமிப்புக் கணக்கில் தனது பணம் வரவு வைக்கப்படவில்லை என்று தெரியவந்தது.இதேபோல், ராகுவையன்வலசு சக்திவேல் மனைவி பொன்னம்மாள், 30, என்பவரது கணக்கில், 13 ஆயிரம் ரூபாய் பாஸ்புக்கில் வரவு வைக்கப்பட்டு, தபால் நிலையத்தில் வரவு வைக்கப்படவில்லை.. இதுபோன்று பல்வேறு புகார்கள் தலைமை தபால் நிலையத்துக்கு சென்றதையடுத்து, நேற்று காலை தபால்துறை ஆய்வாளர் சுப்பையா, தணிக்கையாளர் ஞானராஜ் ஆகியோர், தபால் அலுவலகம் வந்து, கணக்கை சரிபார்த்தனர்.



மேலும், கண்ணனிடமும் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில்தான், பணம் கையாடல் செய்யப்பட்டது தொடர்பாக முழுவிவரமும் தெரியவரும்.இதற்கிடையே, வரவு வைக்கப்பட்ட பணத்தை பெற்றுத் தரக்கோரி தபால் நிலையத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X