ஆதம்பாக்கம்:ஆதம்பாக்கம், கக்கன் நகரைச் சேர்ந்தவர் ராஜன், 40. இவரது மனைவி பஞ்சவர்ணம், 35. இவர் மீது, திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. அப்போது, உடல் பற்றி எரிந்த நிலையில், பஞ்சவர்ணம் அலறினார்.அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து, அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து, ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், பஞ்சவர்ணம், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிப்பதாக மிரட்டியபோது, சிகரெட் லைட்டரால் அவரை ராஜன் கொளுத்தியது தெரியவந்தது.மனைவியை கொலை செய்ய முயன்ற அவரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.