பள்ளிக்கரணை:வேளச்சேரி, திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 35; பொக்லைன் உரிமையாளர். இதை, பள்ளிக்கரணை, கோபால் நகர் பிரதான சாலையில், வாடகைக்கு விட்டிருந்தார்.மேடவாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தன், 27, என்பவர் டிரைவராக பணியாற்றி வந்தார். சுரேஷ் நேற்று, பணி நடக்கும் இடத்திற்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இயந்திரம் அவர் மீது மோதியது.இதில், பலத்த காயமடைந்த சுரேஷ், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.பள்ளிக்கரணை போலீசார், கோவிந்தனை கைது செய்து விசாரிக்கின்றனர்.