திருப்பூர்:திருப்பூரில் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்
திருப்பூர் பிச்சம்பாளையம் புதுாரை சேர்ந்தவர் சரவணன், 31; பனியன் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.இதற்காக,சிகிச்சை பெற ஆரம்பித்தார்.குடிப்பழக்கத்தை விட முடியாமல், வீட்டில் துாக்குமாட்டி இறந்தார்.
மண்ணரையை சேர்ந்த நஞ்சப்பன், 50. சமீபத்தில், இவரது தந்தை இறந்தார். இதனால், மனமுடைந்து இருந்த அவர், விஷம் குடித்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார்.இரு சம்பவம் குறித்து வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.