கிராமப்புற இளைஞருக்கு வரிந்து கட்டுது வாய்ப்பு : பயிற்சியோ இலவசம்... பலனோ உங்கள் வசம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2019
02:59

திருப்பூர்:திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி, மத்திய அரசின் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில், கிராமப்புற இளைஞர்களுக்கு, ஆடை உற்பத்தி பயிற்சி அளித்துவருகிறது.



தையல், மெர்ச்சன்டைசிங், பேஷன் டிசைன் பயிற்சிகள் துவக்கப்பட்டு, இதுவரை, மொத்தம் 495 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது; இவர்களில், 370 பேர் பயிற்சி முடித்து, ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 125 பேர், பயிற்சி பெற்றுவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஆடை உற்பத்தி உற்பத்தி மேற்பார்வையாளர் மற்றும் நிறுவன பொறியியல் (இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்) என்கிற புதிய பயிற்சி வகுப்பு, இம்மாத இறுதியில் துவங்க உள்ளது.



முதல் பிரிவில், மொத்தம் 70 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருப்பமுள்ள கிராமப்புற இளைஞர்கள், பயிற்சியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நிப்ட்-டீ கல்லுாரி திறன் மேம்பாட்டு துறை தலைவர் சிவஞானம் கூறியதாவது:ஆடை வர்த்தக சந்தையில், போட்டி அதிகரித்துவருகிறது. இதை எதிர்கொள்வதற்கு, உற்பத்தி செலவினங்களை கட்டுப்படுத்துவது மிக அவசியம்.



இதற்கு, பின்னலாடை நிறுவனங்கள், நிறுவியுள்ள மெஷினரிகளை முழுமையாக பயன்படுத்துவது அவசியமாகிறது. தொழில் துறைக்கு மிக அத்தியாவசியமானதாக உள்ள இந்த நுட்பங்கள் குறித்து கற்பிக்கும் இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் பயிற்சி, இம்மாத இறுதியில் துவங்க உள்ளது.



ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த கிராமப்புற இளைஞர்கள், இந்த நான்கு மாத இலவச பயிற்சியில் இணையலாம். தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படுகிறது; மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, விடுதியில் தங்கி அல்லது வீட்டிலிருந்து தினமும் மையத்துக்கு வந்து படிக்கலாம். பயிற்சியில் சேர விரும்புவோர், 87546 23111 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X