பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
03:16

கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சியில், சமுதாய சுகாதார வளாகம் பூட்டியே கிடப்பதால், அதை பயன்படுத்த முடியாமல், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.


கடம்பத்துார் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, 2011 - 12ல், சமுதாய சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது.இந்த சுகாதார வளாகம், 2015ல், காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின், ஓராண்டாக, இந்த சுகாதார வளாகத்தை, பொதுமக்கள் மற்றும் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வந்தனர்.அதன்பின், நான்கு ஆண்டுகளாக போதிய பராமரிப்பில்லாததால், பூட்டியே கிடக்கிறது. இதனால், பொதுமக்களும், சந்தைக்கும் வரும் வாடிக்கையாளர்களும், அவதிப்பட்டு வருகின்றனர்.சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரி, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், சமுதாய சுகாதார வளாகத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X