கும்மிடிப்பூண்டி:வட்டி பணத்தை உடனடியாக தர வலியுறுத்தி, நீர்த்தேக்க திட்ட இறுதி பணிகள் நடைபெறும் இடத்தை, கிராம மக்கள் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாதர்பாக்கம் அருகே, கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகை ஏரிகளை இணைத்தபடி, சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கம், ஏற்படுத்தப்பட்டு உள்ளது.நிலம் கையகப்படுத்தும் பணிகள், 2013ல் துவங்கிய நிலையில், நீதிமன்ற தீர்ப்புக்கு பின், 2018ல், இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.இழப்பீட்டு தொகைக்கான ஐந்து ஆண்டு கால வட்டி தொகை வழங்கப்படவில்லை.வட்டி பணம் தருவதில், மாவட்ட நிர்வாகம் இழுத்தடிப்பு செய்வதால், பொறுமை இழந்த கிராம மக்கள், நேற்று, நீர்த்தேக்க திட்ட இறுதி பணிகள் நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.உடனடியாக வட்டி பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், கிராம மக்கள் சமாதானம் அடைந்து, கலைந்து சென்றனர்.