சமுதாய ஓட்டுகளை மொத்தமாக அறுவடை செய்ய... உள்ளாட்சி தேர்தல் பணியில் கட்சிகள் சுறுசுறுப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2019
04:13

சின்னமனுார், மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சி நிர்வாகிகள் சமுதாய ரீதியான ஓட்டுகளை கணக்கிட்டு, வெற்றிக்காக அவற்றை மொத்தமாக அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேரூராட்சி, ஊராட்சிகளில் சமுதாய தலைவர்களை நிறுத்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

விரைவில் அறிவிக்கப்படவுள்ள உள்ளாட்சி தேர்தல், 2021ல் நடைபெறவுள்ள சட்டசபை பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள் ளது. உள்ளாட்சி பதவிகளை அதிக எண்ணிக்கையில் கைப்பற்றினால், அடுத்து நடைபெறும் சட்டசபை தேர்தலை எளிதாக சந்திக்கலாம் என்று அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் நினைக்கின்றனர்.

உள்ளாட்சி பதவிகளில் போட்டியிட வெற்றி வாய்ப்புள்ள நபர்களை தேர்வு செய்ய பேரூராட்சி, ஊராட்சி செயலாளர்களுக்கு ஒன்றிய, மாவட்ட

நிர்வாகிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது.

அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகி கூறுகையில்,

'நகராட்சி தலைவர், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலருக்கான பெயர் பட்டியல் தயாரித்து மேலிடத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது. பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலருக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது,' என்றார்.

தி.மு.க., நிர்வாகி கூறுகையில், ' அ.தி.மு.க.,வுக்கு 2011 ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றியைப் போல இம்முறை முறை கிடைக்க சாத்தியமில்லை. அ.ம.மு.க.,வை சமாளிக்க அ.தி.மு.க., சிரமப்படும். பேரூராட்சி, ஊராட்சி தலைவர் பதவிக்கு ஜாதிய பின்னணி கொண்டவர்களை அ.தி.மு.க., வேட்பாளர்களாக அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

அதே 'பார்முலா'வை பின்பற்ற மேலிடத்திற்கு நாங்களும் வலியுறுத்தியுள்ளோம்,' என்றார்.



உளவுத்துறை அறிக்கை

கம்பம்: தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டுகள், எந்தெந்த கட்சியை சார்ந்தவர்கள் தலைவர், கவுன்சிலர்களாக இருந்தனர், எந்த ஊரில் அதிக ஓட்டுகள் பெற்றனர், பிரசார யுக்தி, இம்முறை வெற்றிக்கு என்ன வழி என்பன உள்ளிட்ட விபரங்களை சேகரித்து உளவுத்துறை போலீசார் அரசிற்கு அறிக்கையாக தயாரித்து அனுப்பி வருகின்றனர்.


 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X