கம்பம்,விவசாயிகள் திருப்திபடும் வகையில் வாழைக்கு விலை
கிடைத்து வருகிறது. கடந்தாண்டு ஜி 9 ரகம் சாகுபடி பரப்பு குறைந்ததால் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் வாழை சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. செவ்வாழை, ஜி 9 , நேந்திரன்,
நாழிப்பூவன், கற்பூரவல்லி உள்ளிட்ட ரகங்கள் அதிகமாக
சாகுபடி செய்யப்படுகிறது.
இதில் ஜி 9 ரகம் கடந்த பல ஆண்டுகளாக அதிக பரப்பில்
சாகுபடியாகி வந்தது. ஆனால் விலையில் சரிவு ஏற்பட்டதால், கடந்தாண்டு சாகுபடி பரப்பு குறைந்தது. எனவே வரத்து குறைந்ததால் தற்போது விலை திருப்திப்படும் நிலையில் உள்ளது. கிலோவிற்கு
ரூ. 17 முதல் 19 வரை கிடைக்கிறது. இதேபோல செவ்வாழை கிலோm சராசரியாகn ரூ. 35, நாழிப்பூவன் கிலோ ரூ. 40 வரை கிடைக்கிறது. விவசாயிகள் மீண்டும் ஜி 9 ரகம் சாகுபடிக்கு திரும்பியுள்ளனர்.