| விதிமுறையை அலட்சியப்படுத்தும் டிரைவர்கள்: தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து அபாயம் Dinamalar
விதிமுறையை அலட்சியப்படுத்தும் டிரைவர்கள்: தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து அபாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
05:05

மடத்துக்குளம்:மடத்துக்குளத்துக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், வேகக்கட்டுப்பாட்டு விதிமுறையை அலட்சியப்படுத்துவதால், விபத்துகள் நடந்து வருகின்றன.



தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. அமராவதி ஆற்றுப்பாலம் தொடங்கி செட்டியார் மில் வரை நான்கு கி.மீ., நீளம், நெடுஞ்சாலையின் இரு புறமும் வீடுகள், கடைகள், பள்ளிகள் உள்ளன.இந்த நான்கு கி.மீ.,க்கு இடைப்பட்ட பகுதியில், பல விபத்துக்கள் நடந்துள்ளன. இதற்கு, வாகனங்களின் மிக வேகம் தான் அடிப்படை காரணமாக உள்ளது.



முதன்முறையாக, மடத்துக்குளம் நகரத்தை கடந்து, செல்லும் ஓட்டுனர்களால், கிராமச் சாலைகள், மக்கள் நடமாடும் பகுதி, பள்ளி, கோவில் குறித்து தெரியாமல், நிலை தடுமாறி விபத்துக்கள் ஏற்படுகிறது.இதற்குத்தீர்வாக வேகக்கட்டுப்பாடு அமல்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.



இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தியும் வெளியானது. இதன் எதிரொலியாக, அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் குறைவான வேகத்தில் வாகனம் இயக்கவேண்டும் என அறிவுறுத்தி 30 கி.மீ., என குறிப்பிட்டு போர்டு அமைக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:வேகக்கட்டுப்பாடு விதிமுறையை, 90 சதவீத டிரைவர்கள் பின்பற்றுவது இல்லை. கடந்த முதல் தேதி இரவு, 8:30 மணிக்கு இரண்டு குழந்தைகளுடன் வந்த ஒரு முதியவர், நரசிங்காபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோட்டை கடந்த போது, மிகவேகமாக வந்த பைக் மோதி ஒரு குழந்தை இறந்தது. உடன் வந்த சிறுமிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. முதியவர் பலத்த காயம் அடைந்தார்.



இதனால், இந்த பகுதியில் விபத்து அபாயம் உள்ளது. இது குறித்து போலீசார் கண்காணித்து, விதிமுறை மீறி மிகவேகமாகச்செல்லும் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டால், வேகக்கட்டுப்பாடு முழுமையாக நடைமுறைக்கு வரும். விபத்துக்கள் தவிர்க்கப்படும்.இவ்வாறு, கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X