பொள்ளாச்சி:பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டுகள் நகராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ளது. பஸ் ஸ்டாண்டை பயன்படுத்தும் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் நுழைவுக்கட்டணம் செலுத்துகின்றனர்.
இந்நிலையில், பழைய பஸ் ஸ்டாண்டில் பல இடங்களில் ஓடுதளம் குண்டும், குழியுமாக உருக்குலைந்துள்ளது. குழிகளில் மழை நீர் தேங்கி, சேதம் பெரிதாகி வருகிறது. பஸ் ஸ்டாண்டினுள் வரும் பஸ்கள், குழிகளில் இறங்கி, ஏறி, தடுமாறுகின்றன. படிக்கட்டில் நிற்கும் பயணிகள், தவறி கீழே விழும் அவலமும் அரங்கேறுகிறது. பயணிகள் பாதுகாப்பு கருதி, பஸ் ஸ்டாண்ட் ஓடுதளத்தை, நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும்.