| பிளாஸ்டிக் கழிவால் நாசமாகிறது மலை ஊட்டிக்கு எடுத்து செல்ல தடை Dinamalar
பிளாஸ்டிக் கழிவால் நாசமாகிறது மலை ஊட்டிக்கு எடுத்து செல்ல தடை
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
05:59

மேட்டுப்பாளையம்:ஊட்டிக்கு பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக மேட்டுப்பாளையம் உள்ளது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள்,கார்,வேன்,பஸ் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஊட்டிக்கு செல்கின்றனர். இவர்கள் குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பைகளில் கொண்டு செல்கின்றனர்.



இந்நிலையில்,நீலகிரி மாவட்ட நிர்வாகம்,பிளாஸ்டிக் இல்லாத பசுமை மாவட்டமாக நீலகிரியை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் முதல் நடவடிக்கையாக, மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலான, மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு மலைப் பகுதியில், முதல் கொண்டை ஊசி வளைவு அருகே, சோதனை சாவடி அமைத்துள்ளனர்.



அங்கு பணியில் உள்ள அரசு ஊழியர்கள், அவ்வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்கின்றனர். பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால், அவற்றை வாங்கி குப்பைத் தொட்டியில் போடுகின்றனர். மறைத்து கொண்டு சென்றால், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றனர்.மேலும், நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற, ஒவ்வொரு வாகனத்துக்கும் பசுமை வரியாக, 30 ரூபாய் வசூலிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X