ஆடு வழங்கும் திட்டத்தில் பாரபட்சம்!அதிகாரிகள் மீது மக்கள் புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2019
06:05

அன்னுார்:கரியாம்பாளையம் ஊராட்சியில், விலையில்லாத ஆடுகள் திட்ட பயனாளிகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது என புகார் எழுந்துள்ளது.



தமிழக அரசு, கிராமப்புறத்தில் உள்ள ஏழை பெண்களுக்கு விலையில்லாத ஆடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில், கரியாம்பாளையம் ஊராட்சியில், 132 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆடுகள் வாங்கும் முன், அதை எப்படி பராமரிப்பது என, பயிற்சி தரும் கூட்டம் நேற்று எல்லப்பாளையம் பிரிவில் உள்ள சமுதாயநலக் கூடத்தில் நடந்தது.



தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலை டாக்டர் அனிதா, பயனாளிகளுக்கு ஆடுகள் வளர்க்கும் முறை, என்ன உணவு வழங்கலாம் உள்ளிட்ட அறிவுரைகளை தெரிவித்தார். இத்திட்டத்தில் மூன்று பெட்டை ஆடுகள், ஒரு கிடாய் வாங்க, 10 ஆயிரம் ரூபாயும், கொட்டகை அமைக்க இரண்டாயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.



பயிற்சி வகுப்பு நடக்கும்போது, எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்த சிலர், அங்கிருந்த அதிகாரி களிடம்,'எங்களை விட வசதியானவர்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதில் பாரபட்சம் உள்ளது. பரம ஏழையாக உள்ளவர்கள் இதில் விடுபட்டுள்ளனர்' என, சரமாரியாக புகார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து பி.டி.ஓ., விஜயராணியிடமும் புகார் தெரிவித்தனர்.



கால்நடை மருத்துவர் கனகராஜ் கூறுகையில், ''கால்நடை மருத்துவர், துணை பி.டி.ஓ., வி.ஏ.ஓ., ஆதிதிராவிட மூத்த உறுப்பினர், மகளிர் குழு உறுப்பினர் என, ஏழு பேர் கொண்ட குழுதான் பயனாளிகளை தேர்வு செய்தது. இதுவரை அரசின் நலத்திட்டங்களில் பயன்பெறாதவர்களாக வும், ஏழைகளிலும் ஏழை என பார்த்து தேர்வு செய்துள்ளோம்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X