மியான்மரில் ஆயுத பயிற்சி பெற்ற மாவோயிஸ்ட்! கேரளா தண்டர்போல்ட் போலீசார் விசாரிக்க திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2019
06:41

கோவை:கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீபக், மியான்மரில் சிலருடன் சேர்ந்து ஆயுத பயிற்சி பெற்ற தகவல் வெளியாகியுள்ளது. இவரிடம் விரைவில் கேரளா, 'தண்டர்போல்ட்' போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.



கேரளா, பாலக்காடு, மஞ்சகண்டி வனப்பகுதியில் தண்டர்போல்ட் போலீசாரால் சுடப்பட்டு, காயங்களுடன் தப்பிய சட்டீஸ்கரை சேர்ந்த மாவோயிஸ்ட் ஆயுத பயிற்சியாளரான தீபக், 32, கோவை வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். இவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கோவை அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.



பாதுகாப்பு பணியில் ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் ஏழு போலீசார் ஈடுபட்டுள்ளனர். சுழற்சி முறையில், 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மாவோயிஸ்ட் தீபக்கிடம் மொழி பிரச்னை காரணமாக விசாரணை நடத்துவதில், சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.அதேநேரத்தில், இவர் மீது தற்போது தடாகம் போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தவிர, தமிழகத்தில் எந்த வழக்கும் இல்லை.



மாவோயிஸ்ட் கைது குறித்து சிறப்பு அதிரடிபடை மூலம் கேரளா தண்டர்போல்ட் போலீசாருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இவர்கள் கோவை வந்து தீபக்கிடம் விசாரணை நடத்தலாம் என, கூறப்படுகிறது. இதற்கிடையே, சட்டீஸ்கரை சேர்ந்த தீபக், மியான்மரில் ஆயுத பயிற்சி பெற்ற தகவல் வெளியாகியுள்ளது.



கோவை போலீசார் கூறியதாவது:சட்டீஸ்கரில் இருந்து கேரளா வந்த தீபக், அங்குள்ள நண்பர்கள் உதவியுடன் பலரிடம் தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளார். இவருக்கு கேரளா, தமிழகம், கர்நாடகா, சட்டீஸ்கர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாவோயிஸ்ட் கும்பலுடன் நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது.இவர் நவீன ரக துப்பாக்கிகளை கையாள்வதில் சிறப்பு பயிற்சி பெற்றவர். இதற்காக மியான்மரில் ஆறு மாதம் வரை பயங்கரவாத ஆயுத பயிற்சி பெற்றுள்ளார்.



தாக்குதல் வழிமுறைகள், தாக்குதலின்போது ஆயுதங்களை திறம்பட கையாள்வது உள்ளிட்ட பயிற்சிகளையும் பெற்றுள்ளார்.இவர் மீது கேரளா, சட்டீஸ்கர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. தமிழகத்தில் தற்போது கோவையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டுமே உள்ளன. சிகிச்சைக்கு பின் இவரை, கஸ்டடி எடுத்து விசாரிக்கும்போது பல்வேறு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X