| 'லிம்கா' சாதனை புத்தகத்தில் 'மேக் இன் இந்தியா' ஓவியம்: திருப்பூர் மாணவர்கள் அசத்தல் Dinamalar
'லிம்கா' சாதனை புத்தகத்தில் 'மேக் இன் இந்தியா' ஓவியம்: திருப்பூர் மாணவர்கள் அசத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
06:45

திருப்பூர்:திருப்பூர் 'நிப்ட் டீ' கல்லுாரி மாணவ, மாணவியர் வரைந்த, 'மேக் இன் இந்தியா' பிரமாண்ட ஓவியம், 'லிம்கா' சாதனைப்புத்தகத்தில் இடம்பெறுகிறது.



திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சார்பில், முதலிபாளையத்தில், 'நிப்ட்-டீ' கல்லுாரி செயல்படுகிறது. அங்குள்ள, 'பேஷன் டிசைன்' பிரிவு மாணவர்கள் 25 பேர், 2018 ஆக., 17 காலை, 6:00 மணிக்கு துவங்கி, அடுத்த நாள் (18ம் தேதி) மாலை, 3:45 மணி வரை தொடர்ந்து, 33 மணி, 45 நிமிட நேரம், ஓவியம் வரைந்தனர்.மொத்தம், 2,000 சதுர அடி பரப்பில், 'மேக் இன் இந்தியா' என்ற தலைப்பில் இந்த ஓவியம் உருவாக்கப்பட்டது. 'மேக் இன் இந்தியா' திட்ட 'லோகோ'வான சிங்கம்; அதைச் சுற்றி, பல்வேறு மறுசுழற்சி நுாலிழைகளில் ஆடை தயாரிக்கும் அம்சங்கள் வரையப்பட்டன.



இந்த பிரமாண்டமான ஓவியம், 2020, 'லிம்கா' சாதனைப் புத்தகத்தில், இடம்பெறுமென, அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லுாரி தலைமை டிசைனர் பூபதி கூறுகையில், ''இக்கல்லுாரி ஏற்கனவே, பின்னலாடைத்துறை வளர்ச்சி தொடர்பான ஓவியம் வரைந்து, 2016ல், 'லிம்கா' சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. அடுத்தகட்டமாக, லிம்கா குழுவினர் மேற்பார்வையில், 'மேக் இன் இந்தியா' ஓவிய சாதனை நிகழ்த்தப்பட்டது. சாதனைப்புத்தகத்தில் இடம் பெறும் கடிதத்தை, 'லிம்கா' நிறுவனம், 'நிப்ட்- டீ' கல்லுாரிக்கு அனுப்பியுள்ளது' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X