| உள்ளாட்சி தேர்தல் மர்மம்: முத்தரசன் குற்றச்சாட்டு Dinamalar
உள்ளாட்சி தேர்தல் மர்மம்: முத்தரசன் குற்றச்சாட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
06:46

திருப்பூர்:'தமிழக உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள், மர்மம் நிறைந்ததாக உள்ளது' என்று, இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.



திருப்பூரில், இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன், கூறியதாவது: மகாராஷ்டிராவில், அவசரமாக ஜனாதிபதி ஆட்சி அமலாகியுள்ளது. 'ஒரே நாடு ஒரே கட்சி' என்ற நோக்கத்துடன், பா.ஜ., செயல்படுகிறது.தமிழக உள்ளாட்சி தேர்தல், டிச., மாதம் நடக்குமென, தகவல் வந்து கொண்டிருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கையில் வெளிப்படை தன்மை இல்லை. மர்மம் நிறைந்ததாக இருக்கிறது.துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யும் வழக்கு மற்றும் ராதாபுரம் தொகுதி மறு ஓட்டு எண்ணிக்கை வழக்கு நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X