'133 குழந்தை திருமணங்கள் திருப்பூரில் ஓராண்டில் தடுப்பு'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2019
06:54

திருப்பூர்:'திருப்பூர் மாவட்டத்தில், ஒரு ஆண்டில், 133 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.திருப்பூர் 'சைல்டு லைன்' நோடல் இயக்குனர் லுார்து சகாயம் நிருபர்களிடம் கூறியதாவது:



திருப்பூர் மாவட்டத்தில், சமூக நலத்துறை, 'சைல்டு லைன்' மூலம், 2018 நவ., முதல் 2019 அக்., வரை, 133 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, காங்கயம், உடுமலை, மடத்துக்குளத்தில் குழந்தை திருமண முயற்சி நடந்துள்ளது. கடந்த, 2017ல் 108, 2018ல் 126 என, இரு ஆண்டுகளை விட, இந்தாண்டு அதிகம்.உடல்ரீதியான துன்புறுத்தல் - 77, மிரட்டல் - 24, பாலியல் துன்புறுத்தல் - 22 புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.



பல்வேறு இடங்களில், 18 வயது குறைவானவர்களை பணிக்கு ஈடுபடுத்தியதாக - 13, குழந்தைகளை பிச்சையெடுக்க வைப்பதாக - 100 புகார்கள் வந்துள்ளன. தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி, இன்று (நேற்று) முதல் 25ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில், குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் '1098' சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X