விபத்து இழப்பீடு வழங்காததால் இரண்டு அரசு பஸ்கள் ஜப்தி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2019
09:08

தர்மபுரி: இருவேறு விபத்து வழக்கில், இழப்பீடு வழங்காததால், தர்மபுரியில், அரசு பஸ்கள் இரண்டு ஜப்தி செய்யப்பட்டன.


உடுமலைபேட்டையை சேர்ந்தவர் குமார், 34. இவர், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த, 2016 ஏப்., 4ல், சேலம் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தபோது, பின்னோக்கி வந்த விழுப்புரம் கோட்ட அரசு பஸ், அவர் மீது மோதியதில் இறந்தார். அவரது தந்தை கனகராஜ், தாய் ருக்மணி, மனைவி மைதிலி, மகன் அரீஷ் ஆகியோர், குமாருக்கு விபத்து இழப்பீடு கேட்டு, தர்மபுரி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். குமாரின் குடும்பத்தினருக்கு, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம், 95 லட்சத்து, 94 ஆயிரத்து, 236 ரூபாய் இழப்பீடு வழங்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. இழப்பீடு தொகை வழங்காதநிலையில், நேற்று நீதிமன்ற உத்தரவு படி, தர்மபுரி பஸ் ஸ்டாண்டில், சென்னை செல்ல தயாராக இருந்த, விழுப்புரம் கோட்டம் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.


* தர்மபுரியை சேர்ந்தவர் சாக்கீரா, 45. இவரது மகன், நதீம் அக்தர், 18. இருவரும், கடந்த, 2015ல், தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் அருகே, நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த அரசு பஸ், நதீம் மீது மோதியதில், படுகாயம் அடைந்தார். இதற்கு, இழப்பீடு கேட்டு, தர்மபுரி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசு போக்குவரத்து கழகம், நதீமுக்கு, நான்கு லட்சத்து, 37 ஆயிரத்து, 818 ரூபாய் இழப்பீடு வழங்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததை அடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று, தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் பெங்களூருக்கு செல்ல தயாராக இருந்த, அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.


 

Advertisement
மேலும் தர்மபுரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X