ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கடந்த, அக்., 29 முதல் எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் என விதிகள் மாற்றப்பட்டுள்ளது. பழங்குடியினர், ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு, சம்பந்தப்பட்ட யூனியன் அலுவலகத்தில் உள்ள, சமூக நல விரிவாக்க அலுவலர், ஊர்நல அலுவலர்களை அணுகி தெளிவு பெறலாம். தவிர, இ-சேவை மையங்கள் மூலமும் அறிந்து பயன் பெறலாம். பொதுமக்கள், இடைத்தரகர்களை அணுக வேண்டாம். இடைத் தரகர்களாக செயல்படுபவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என, சமூக நலத்துறையினர் எச்சரித்துள்ளனர்.