அந்தியூர்: அந்தியூர் வட்டாரத்துக்குட்பட்ட, அரசு பள்ளியில் படிக்கும், மாணவ, மாணவியருக்கு இளம் படைப்பாளர்களுக்கான போட்டி தேர்வு நேற்று அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்தது. அந்தியூர் வட்டாரத்துக்குட்பட்ட, 25 பள்ளிகளில் இருந்தும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை என பிரிக்கப்பட்டு போட்டி தேர்வு நடந்தது. 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கட்டுரை, பேச்சு மற்றும் கவிதை போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்று, தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் இருவர் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட அளவில் நடக்க இருக்கும் போட்டி தேர்வில் பங்கேற்பர்.