| இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்: ஈரோடு தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம் Dinamalar
இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்: ஈரோடு தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
09:24

ஈரோடு: பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என, ஈரோடு தெற்கு மாவட்ட, தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


ஈரோட்டில், தி.மு.க., தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரகுமார், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், வக்கீல் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போதுள்ள, 27 சதவீத இட ஒதுக்கீட்டை, 50 சதவீதமாக உயர்த்த வேண்டும், தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். பிளக்ஸ் பேனர் வைப்பது, பட்டாசு வெடிப்பது, கொடி கம்பங்களை நடுவது போன்ற பொதுமக்களுக்கு இடையூறான செயல்களில், தெற்கு மாவட்டம் ஈடுபடாமல் இருந்து வருகிறது. இதை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். பயனற்ற, திறந்த நிலையில் உள்ள போர்வெல்களை மூட சம்பந்தபட்டவர்களுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X