மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியன், ஈஞ்சம்பள்ளி பஞ்., களத்துமின்னப்பாளையம் காலனியை சேர்ந்த துளசி, 45, கூலித்தொழிலாளி. கணவரை பிரிந்து வாழ்கிறார். இவர்களுக்கு, 1991ல், ஜவஹர் வேலை வாய்ப்பு திட்டத்தில், மாவட்ட நிர்வாகம் வீடு வழங்கியது. தற்போது வீடு பழுதடைந்து, கம்பிகள் தெரிந்தவாறு இடியும் நிலையில் உள்ளது. நேற்று முன்தினம், வீட்டின் உட்புறத்தில் உள்ள சிமென்ட் கூரைகள் பெயர்ந்து விழுந்ததில் துளசி பலத்த காயமடைந்தார். எழுமாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, துளசி வீட்டை பராமரித்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.