மொடக்குறிச்சி: ஈரோடு மாநகராட்சி, வெண்டிப்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்திலிருந்து, மணலி கந்தசாமி வீதி செல்லும் சாலை, பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாநகராட்சி சார்பில், கடந்த மாதம் குழியாக காணப்பட்ட பகுதியில், ஜல்லி கற்கள் கொட்டி சமப்படுத்தினர். மழைக்கு பின், மீண்டும் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. போக்குவரத்து அதிகம் மிகுந்த பகுதியாகவும், நாமக்கல், ஈரோடு மாவட்டத்திற்கு செல்லும் முக்கிய சாலையென்பதால் போக்குவரத்து அதிகம் உள்ளது. எனவே, சாலையை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.